பிரபாகரனின் மற்றொரு வீட்டையும் அடையாளம் கண்டது சிங்களகடற்படை

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

ஆன்ந்தபுரம், செப். - 16 - இலங்கையின் வடபகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வாழ்ந்த மற்றொரு வீடு ஒன்றையும் சிங்களப் படையினர் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பிரபாகரனின் பதுங்கு குழி வீட்டை கண்காட்சிப் பொருளாக்கி சிங்களவரைப் பார்வையிட அனுமதித்து வருகிறது சிங்களப் படை. இந்த நிலையில் ஆனந்தபுரம் என்ற கிராமத்திற்குள் முழுவதும் சேதமடைந்த நிலையிலுள்ள வீடு ஒன்று பிரபாகரன் தங்கியிருந்த வீடாக சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் பின்புறத்திலிருந்து தொடங்கும் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் தொடக்கம் 400 மீட்டர் வரையில் நிலத்திற்குக் கீழ் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரின் போது பிரபாகரன் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் அதன் பின்னர் விடுதலை புலிகளே அந்த வீட்டையும் பதுங்கு குழியையும் குண்டு வைத்து தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் தகவல் ஒன்று கூறுகிறது. குண்டுவைத்து சிதைக்கப்பட்டுள்ள வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள பதுங்கு குழிக்கு செல்வதற்கான நுழைவாயில் அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளே என்ன இருக்கின்றதென்பதை சிங்களப் படையினர் கூட இன்னமும் பார்வையிடவில்லை என கூறப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்: