முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடுமூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள்:

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, செப்.- 17 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். சென்னையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள், வியாபாரிகள்,பொதுமக்கள் நலன்கருதியே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததில் தவறு எதுவும் இல்லை. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வார்கள். இதன்மூலம் விவசாயிகள் கூடுதல் பலன் அடைவார்கள். வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தடையின்றி வழங்க முடியும். விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகள்தான் செயல்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விருப்பப்பட்டால் இந்த சட்டத்தை அமல்படுத்தலாம் என்றார். கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் டீசல் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று. மத்திய அரசு டீசல் லிட்டர் 1-க்கு ரூ.18, சமையல் எரிவாயு 1-க்கு ரூ.350 மானியமாக வழங்கிவருகிறது. இந்த நிலை நீnullடித்தால் நாட்டின் பெருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கும் என்பதால் சிறிதளவு விலையை உயர்த்தி உள்ளேம். சர்வதேச சந்தையில் விலை குறையும்போது விலை குறைக்கப்படும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், காவிரி நதி நீnullர் ஆணைய கூட்டம் செப்.19-​ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அப்போது கர்நாடக மாநில அணைகள் nullநீர் இருப்பையும், தமிழகத்துக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்படும். மேலும், கர்நாடக மாநில அரசு இதுவரை காவிரி நீnullர் ஆணையத்தின் உத்தரவையோ, உச்சnullநீதிமன்றத்தின் உத்தரவையோ மதித்து செயல்படாமல் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவது சரியானது அல்ல என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago