பொருளாதார சீர்திருத்தம் செய்துவிட்டார் மன்மோகன்: அமெரிக்க

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப். - 17 - எந்த அமெரிக்க ஏடுகள் மவுனியான பிரதமர், ஊழல் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவர், செயல்படாத பிரதமர் என்றெல்லாம் வர்ணித்தவோ அதே பத்திரிகைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விருப்பப்படியான அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று மன்மோகன்சிங் அறிவித்தவுடன் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுகின்றன. அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதி அளித்திருப்பது மிகப் பெரிய பொருளாதார சீர் திருத்தம் என்று அமெரிக்க பத்திரிகைகள் சொல்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலானது இந்த பொருளாதார சீர்திருத்தம் என்கின்றன. பொருளாதார பின்னடைவை சரிசெய்து, வேலைவாய்ப்பையும், நாட்டின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டிய நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்தாகும் நெருக்கடியில் இருக்கிறது என தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்துவதன் மூலம் அரசியல் சவாலையும், கூட்டணி கட்சிகள் முறியும் அபாயத்தையும் காங்கிர அரசு எதிர்கொள்கிறது என்றும் அந்த ஏடு கூறுகிறது. மெளன பிரதமர் என்று மன்மோகன்சிங்கை சாடிய தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தற்போது, வளர்ச்சியற்ற பொருளாதாரம், பணவீக்கம், ஊழல் முறைகேடு ஆகியவற்றால் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் தள்ளப்பட்டிருப்பதாக சொல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: