முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானுக்கு எதிராகசீனாவில் தொடர்கண்டன போராட்டம்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், செப். - 17 - கிழக்கு சீனக் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு வளம் மிக்க தியாவ்யூ தீவை விலைக்கு வாங்கி ஜப்பான் தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தியாவ்யூ தீவை சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன.ஆனால் ஜப்பானோ தியாவ்யூ தீவை விலைக்கு வாங்கி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனாவின் 6 உளவு கப்பல்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு உள்ளன. இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே சீன தலைநகர் பீஜிங்கில் ஜப்பான் தூதரகத்தை முற்றுகையிட்டு சீனர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஜப்பான் தூதரகம் மீது உருட்டுக் கட்டைகளையும் முட்டைகளையும் பாட்டில்களையும் வீசி எறிந்தனர். ஜப்பானின் இந்த நடவடிக்கைகளினால் ஆத்திரமடைந்துள்ள சீனர்கள், அந்நாட்டு அரசாங்கத்தை போரில் ்ஈடுபடுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். ஜப்பானிய பொருட்கள் மீது தடைவிதிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவங்களைக் கண்டித்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ, ஜப்பானியரின் பாதுகாப்பை சீன அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago