முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஆர். ராதா நினைவு நாள்: இலவச பல் மருத்துவ முகாம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.18 - எம்.ஆர்.ராதாவின் 33 வது நினைவு நாளையொட்டி இலவச பல் மருத்துவ முகாம்  நடைபெற்றது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவு நாளையொட்டி நடிகவேள் எம்.ஆர்.ராதா அறக்கட்டளையின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்  சென்னை தியாகராய  நகரில் உள்ள ஜே.ஜி.எச்.ஆர். பல்  மருத்துவமனையில் திங்கட் கிழமை அன்று  நடத்தியது.

இலவச பல் மருத்துவ முகாமை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு துவக்கி வைத்தார். நடிகர் ராதாரவி வரவேற்புரையாற்றினார். விழா நிழச்சியை இயக்குனர் கே.ஆர்.செல்வராஜ் தொகுத்து வழங்கினார். எம்.ஆர்.ராதாவின் மகள் ரதி, ஜானகிராமன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஜானகிராமன், டாக்டர் ஹரிகரன் ஆகியோர் பல் மருத்துவ சோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர்,  துணை தலைவர்கள் நடிகர் விஜயகுமார், கே.என்.காளை, நடிகர்கள் வாசுவிக்ரம், அருண் விஜய், ஜீவன், இயக்குனர் சந்தானபாரதி, தயாரிப்பாளர்கள் திருப்பூர் மணி, ஜே.எஸ்.ருக் மாங்கதன், பார்வதி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago