முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்முட்டி பாராட்டியது பெருமையாக இருந்தது: ஸ்ரீகாந்த்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.20 - மலையாள நடிகர் மம்முட்டி பாராட்டியது பெருமையாக இருந்தது என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பாகன். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருந்தார். அஸ்லம் பாகனை இயக்கியிருந்தார். கடந்த வாரம் படம் திரைக்கு வந்தது. திரையிட்ட இடமெல்லாம் படம் வெற்றிகராக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதுபற்றி ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு என்னோட படங்கள் பேசப்பட்டது. இடையில் பெரிய அளவில் படங்கள்  ஒத்துக்கொள்ளவில்லை. ஷங்கரின் நண்பன் படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். படம் திரைக்கு வந்து பேசப்பட்டது. அதற்கு பிறகு அஸ்லம் சொன்ன ஸ்கிரிப்ட்தான் பாகன். இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் நடித்தேன். படம் உருவாகும்போதே வெற்றி படமாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இது இப்போது நிரூபணமாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 145 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அனைத்து சென்டரிலும் இரண்டாவது வாராமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வித்தியாசமாக புதுமையோடு ஒரு விஷயத்தை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு முந்திய படங்கள் எவ்வளவோ  சொல்ல முடியும். தற்போதைய வெற்றி பாகன். 

இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதற்கான வாய்ப்பு பாலிவுட்டிலிருந்து வந்திருக்கின்றன. அடுத்து எதிரி எண்.3 த்ரிலர் கதை. பாதி படபிடிப்பு முடிந்துவிட்டது.  இதை தொடர்ந்து நம்பியார் என்ற படத்தில் நடிக்கிறேன். ராமச்சந்திரன் என்ற பெயரில் வரும் ஐ.ஏ.எஸ் கேரக்டர். நடிகர் மம்முட்டி ஒருமுறை நாம் இருவரும் சேர்ந்து நடிப்போம். வாங்க மலையாளப்பக்கம்  என்று கூறினார். விரைவில் அது நடக்கும். என்னோட படங்களை பார்த்து மம்முட்டி பாராட்டியது பெருமையாக இருக்கிறது. இனி நான் நடிக்கும் படங்களை தெலுங்கிலும்  டப்பிங் செய்யும் விதமாக உருவாக்க திட்டமிட்டுயிருக்கிறேன்.

பாகன் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தவர் இயக்குனர் அஸ்லம். அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றி. அவர் சொன்னபடி நடித்தோம். அதனால் கிடைத்த வெற்றிதான் பாகன். இதில் நடித்த எல்லோருக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது மகிழ்ச்சியை கொடுக்கிற விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்