முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு விளம்பரங்களில் சோனியா படம்: தடை கோரி மனு

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத், செப். 20 - மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் உருவப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரும் பொது நல மனு ஒன்று குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த தாமஸ் என்பர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசில் எவ்வித பதவியும் வகிக்காத நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் படத்தை அரசு விளம்பரங்களில் வெளியிடுவது சரியான நடவடிக்கை அல்ல. எனவே இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் புள்ளியல் துறை அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தலை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது போன்ற விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும், அத்தகைய விளம்பரங்களை திரும்ப பெற அறிவுறுத்தும்படியும் அவர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் 20 அம்ச திட்டம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் குஜராத் அடைந்துள்ள மேம்பாடு விளக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மாநில அல்லது தேசிய கட்சி தலைவர் எவருமே அரசியல் சாசனப்படியான பதவி எதையும் வகிப்பதில்லை. அது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, அல்லது எந்த ஒரு பிராந்திய கட்சியாக இருந்தாலும் அக்கட்சி தலைவரின் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறுவது சரியான நடைமுறை அல்ல. 

இத்தகைய சூழலில் மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு விளம்பரங்களிலும் சோனியா காந்தியின் உருவப் படம் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரங்களுக்கான செலவு தொகை முழுவதும் மத்திய அரசால் அளிக்கப்படுகிறது. இது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி உரிய வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட துறை வர்த்தக விளம்பரங்கள் வெளியாகும் போது அத்துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லது அமைச்சரவைக்கு தலைமை ஏற்கும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் தவிர அரசியல் சாசன ரீதியில் எவ்வித சம்பந்தமும் இல்லாத ஒருவரின் புகைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க கூடாது என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி. விஜய் படேல் மனு தாக்கல் செய்துள்ளார். இது போன்று பிறரது படங்களை வெளியிடுவது விஷமத்தனமானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அரசு வெளியிடும் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்று மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்