முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.2 - டீசல் விலை உயர்த்தப்பட்டது, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடந்த 4 நாட்களாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசானது டீசல் விலையை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியுள்ளது. அதோடுமட்டுமல்லாது மான்ய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டரை ஒரு குடும்பத்திற்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில்லறை வர்த்தகம் உள்பட பல துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டீசல் விலையை குறைக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை வாபஸ் பெற வேண்டும். வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். மம்தா கட்சியில் 19 லோக்சபை எம்.பி.க்கள் இருப்பதால் மத்திய அரசு ஆட்டம் கண்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் டீசல் விலை உயர்த்தப்பட்டது, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி கொடுத்தது குறித்து மம்தாவிடம் விளக்கம் அளிக்க நாங்கள் மட்டுமல்லாது பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த 4 நாட்களாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார். 

கடந்த 4 நாட்களுக்கு முன்பே முதல்வர் மம்தாவுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். மம்தாவுடன் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்க பிரதமர் மன்மோகன் சிங்கும் முயற்சி செய்தார். அவரை பேச சொல்லி தகவலும் அனுப்பினோம். ஆனால் நாங்கள் அவரிடம் இருந்து இதுவரை எதுவும் பேச முடியவில்லை என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மத்திய அரசில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் விலக முடிவு செய்திருப்பது குறித்து  ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு வாபஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மம்தா பானர்ஜியை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்