முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி மகன் நிறுவனம் அடித்த கிரானைட் கொள்ளை அம்பலம்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

மதுரை, செப்.21 - தி.மு.க. ஆட்சியில் மதுரை அருகே டாமின் கிரானைட் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் நிறுவனம் கிரானைட் கற்களை கொள்ளையடித்துள்ளது. அழகிரி மகனான தயாநிதி அழகிரி தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தது புதிய ஆதாரங் களுடன் அம்பலமாகி யுள்ளது. மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனத்தின் இயக்கு னராக தயாநிதி அழகிரி மற்றும் நாகராஜன் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த நிறுவனம் மதுரை மாவட் டம் மேலூர் தாலுகா கீழவளவு கிராமத்தில் பொக்கிஷ மலை அருகே டாமின் சுரங்கத்தின் அருகில் இடம் வாங்கி 2008-ம் ஆண்டு கிரானைட் சுரங்கம் தோண்ட அரசிடம் அனுமதியும் பெற்றனர். 2008-ம் ஆண்டே சுரங்கம் எந்த இடத்தில் தோண்டப் போகிறோம் என்பதை குறிப்பிட்டு Mining plan-க்கும் அனுமதி பெற்றனர். 

 

அதிர்ச்சி தகவல்

 

அதிர்ச்சி தகவலாக தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் Mining plan படி அவர்கள் இடத்தில் சுரங்கம் தோண்டவில்லை. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் Mining plan-ன்படி சுரங்கம் தோண்டா மல் தொடர்ந்து கிரானைட் கற்களை மட்டும் அவர்கள் இடத்தில் வைத்துக்கொண் டே இருந்தனர். இதை ஆராயும்போது டாமின் சுரங்கத்தில் திருடுவதற் காகவே டாமின் சுரங்கத் திற்கு அருகில் உள்ள இடத்தை இவர்கள் வாங்கி தொடர்ந்து டாமின் சுரங்க த்தில் இருந்து கற்களை திருடிவந்துள்ளனர். 

டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து தயா நிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட்  நிறுவன இடத் திற்கு கிரானைட் கற்களை கடத்தி வைப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 225 கியூபிக் மீட்டர் கொண்ட 15 பெரிய கேங்சா கற்கள் கடத்தப்பட்டுள்ளன. தயா நிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத் தில் ரூ. 672 கோடி மதிப்பு ள்ள கிரானைட் கற்களை காணவில்லை.

ஆட்சியை  மீண்டும் தி.மு.க. பிடிக்க  முடியாது என்று தெரிந்த உடன் 2011-ம் ஆண்டு ஒலம்பஸ் கிரானை ட்ஸ் நிறுவன இடத்தில் சுரங்கம் தோண்ட ஆரம்பி த்தனர். இவர்களின் இடத் தில் பெரும்பாலும் கிராவல் மண் மட்டுமே இருந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒலம்பஸ் சுரங்கத்தையும் டாமின் சுரங்கத்தையும் சட்டவி ரோதமாக இணைத்துவிடுகி றார்கள். டாமின் பாது காப்பு இடைவெளி பகுதி யையும் தோண்டினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. சுரங்கத்தின் உள்ளே சென்று வேலை பார்க்கும் நேரத்தில் இந்த வீடியோ க்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில் துறை அமைச்சர் வேலு மணி சட்டசபையில் மு.க. அழகிரி சம்பந்தமாக பேசி யதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தன்னுடைய மகன் பெயரில் உள்ள கிரானைட் சுரங்கம் நடைபெற்றதை மறைத்து விட்டார். இதைத் தொடர் ந்து மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் ஒலம் பஸ் கிரானைட்ஸ் நிறுவ னம் அடித்த கொள்ளையை அதிகாரிகள் மறைத்து விட்டதால் பாதுகாப்பு இடை வெளியில் சுரங்கம் தோண்டியதாக ஙூகீச்சூ  இஹசீஙூடீ நோட்டீசுக்கு பதில் அளித்த ஒலம்பஸ் நிறுவனம் டாமின் நிறுவன கிரானைட் சுரங்கத்தின் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் தோண்டவில்லை என்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தனர். இதன்பின் சுரங்கம் தோண் டுவது நிறுத்தப்பட்டது. 

தி.மு.க. ஆட்சியில் கடந்த 20.7.2010-ம் தேதியன்று nullரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர்null என்ற தலைப் பில்  தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந் தது. இதைத் தொடர்ந்து 21.7.2010-ம் தேதியன்று அதிகாலை தினபூமி நாளிதழ் ஆசிரியர் எஸ்.மணி மாறன் மற்றும் பத்திரிகை யாளரும் அவரது மகனு மான எம்.ரமேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். பத்திரி கையாள ர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, அடுத்த நாளே அவசர அவசரமாக சிறையில் இருந்து வெளியே அனுப்பிவைத்தனர். தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து செய்தி வெளி யிட்டதால் மேலும் 5 பொய் வழக்குகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. இதை கண்டித்து அ.தி.மு.க. பொது செயலாளரும் தற்போதைய முதல்வருமான ஜெ.ஜெய லலிதா அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் அனைத்து பொய்  வழக்கு களையும் வாபஸ் வாங்கக் கோரியும் கண்டன அறிக் கையும் வெளியிட்டார். 

மு.க.அழகிரி -மகன் மாட்டிக்கொள்வார் என்ற பயத்தில் தினபூமி ஆசிரியர் கைது-பொய் வழக்குகள்

தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த கைது, பொய் வழக்கு கள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்த போது தினபூமி நாளிதழ் செய்தி வெளி யிட்ட ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்கள் அனைத் தும் டாமின் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனத்தால் கடத்தி வைக்கப் பட்டவை தான். இந்த திருட்டை கண்டு பிடிக்க தினபூமி நாளிதழ் ஒரு மாபெரும் புலனாய்வு வேட்டையை நடத்தியது. இந்த புலனாய்வு வேட் டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கம் அருகே ஏராளமான ரகசிய கேமராக்கள் பயன் படுத்தப்பட்டன. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட் டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து  பி.ஆர்.பி. நிறுவனம் பி.ஆர். பி.  நிறுவன லாரி களில் டாமின் முத்திரை இல்லா மல் கிரானைட் கற்களை கொள்ளை அடித்து பி.ஆர். பி.  நிறுவன இடத்திற்கு கடத்தி கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பி.ஆர்.பி.  நிறுவனம் வெள் ளூத்துமலை டாமின் சுரங்க த்தில் இருந்து சராசரியாக தினமும் ரூ. 2 கோடி மதிப் புள்ள 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை கடத்தி யது. இதற்கு ஆதாரமும் தினபூமியிடம் உள்ளது.  இதே தவறைத் தானே மு.க.அழகிரியின் மகன் நிறுவனமும் செய்து வருகிறது. மு.க.அழகியின் மகன் மாட்டிக்கொள்வார் என்ற பயத்தின் காரண மாகவே இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் என்பது புலனாகிறது. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இரண்டு இயக்குனர்கள் ஒருவர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மற்றொருவர் எஸ்.நாக ராஜன் ஆவார்.

மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது 1.4.2010-ம் தேதியிட்ட தனது இயக்குனர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை  9.6.2011-ம் தேதி அதாவது சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்ற பின்னர் அதற்குரிய ஆவண மாக ஊஞதங  32 மூலம் ஙஐசஐநபதவ ஞஊ இஞதடஞதஅபஉ அஊஊஅஐதந-ல் தாக்கல் செய்துள்ள“ர். அதேபோல் ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்திற்கு புதிய இயக்குன ராக பாலசுப்பிர மணியம் என்பவரும் 1.4.2010ம் தேதியன்று நியமிக்கப்பட்ட தாகவும் அதற்கான ஆவ ணம்  ஊஞதங 32ஐ 9.6.2011-ம் தேதியன்றும் MCA யில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MCA-க்கு சமர்ப் பித்த ஆவணங்களின்படி 1.4.2010 முதல் 9.6.2011 முடிய ஒரே ஒரு இயக்குனரை மட்டுமே வைத்து எப்படி கம்பெனியை நடத்தி இருக்க முடியும்?

இது தொடர்பாக ஒரு கம்பெனி செக்கரட்டரியை தொடர்புகொண்டு கேட்ட போது பிரைவேட் லிமி டெட் நிறுவனங்கள் கம்பெனிக்கு சட்டப்படி குறைந்தது 2 இயக்குனர் களை வைத்துத்தான் இயக்க முடியும். ஒரு இயக்குனரை வைத்து கம்பெனி இயக்க முடியாது என்றும் கூறினார். 

1.4.2010 -ம் தேதி முதல் 9.6.2011-ம்தேதிவரை புதிய இயக்குனராக ஒலம்பஸ் கிரானைட்ஸ் லிமிடெட்  நிறுவனத்திற்கு யாரையும் இயக்குனராக நியமித்து MCA யில் எந்த ஆவணங் களும்  தாக்கல் ஆகாததால் அழகிரி மகன் தயாநிதி அழகிரிதான் ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 9.6.2011-ம் தேதி வரை இயக்குனராக இருந்துவந்தி ருக்கிறார் என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தவறு செய்யவில்லை என்றால் ஏன் ஓடி ஒளிகிறார். போலீசில் ஆஜராகி விளக்க த்தை தரவேண்டியதுதானே. கனிமொழிக்கு இருக்கும் துணிச்சல்கூட மு.க. அழகிரி மகன் தயாநிதிக்கு இல்லை. தயாநிதி அழகிரி ராஜினா மா செய்யும்போது அந்த கடிதத்தில் தனது தாத்தா மு.கருணாநிதியின் கோபா லபுரம் விலாசத்தை கொடு த்துள்ள“ர். ஒருவேளை அவர் கோபாலபுரத்தில் தனது தாத்தா வீட்டில்தான் ஒளிந்துகொண்டு இருக்கிறாரோ?

 

* 1.4.2010-ம் தேதிய தயாநிதி அழகிரியின் ராஜினாமா கடிதம் Form32 மூலம் 9.6.2011-ம் தேதியன்று Ministry of Corporate affairs-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிந்து தி.மு.க. தோற்ற உடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

*  பிரைவேட் லிமிடெட் கம்பெனியை இயக்க குறைந்தபட்சம் இரண்டு இயக்குனர்கள் தேவை. 1.4.2010-ம் தேதி தயாநிதி அழகிரி உண்மையில் விலகி இருந்தால் புதிய இயக்குனர் நியமனம் செய்யப்பட்டு MCA-யில்  File செய்யப்பட்டு  இருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆண்டுக்கு பிறகு 9.6.2011-ம் தேதியன்றுதான் புதிய இயக்குனர் பாலசுப்பிரமணியம் 1.4.2010-ம் தேதி அன்று இயக்குனராக நியமனம் செய்ததாக Form - 32-ஐ ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்தது.

*  1.4.2010 முதல் 9.6.2011-ம் தேதிவரை சுமார் ஓராண்டுவரை தயாநிதி அழகிரியின் ராஜினாமாவும், புதிய இயக்குனர் பாலசுப்பிரமணியத்தின் நியமனமும் ஏன் ஙஇஅ யில்   தாக்கல் செய்யப்படவில்லை. ஆக மொத்தம் தேர்தலில் தி.மு.க. தோற்ற பின்னர்தான் தயாநிதி அழகிரி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ள“ர் என்பது தெளிவாகிறது. 

* பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு குறைந்தபட்சம் 2 இயக்குனர்கள் தேவை என்பதால் ஒலம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MCA யில் File  செய்த ஆவணங்களின்படி 1.4.2010 முதல் 9.6.2011வரை ஒரு இயக்குனருடன் சட்டவிரோதமாக இயங்கிவந்ததாகத்தான் அர்த்தம். அதனால் அப்படி செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis