மேற்குவங்கத்தில் பந்த்துக்கு ஆதரவு இல்லையாம்: மம்தா

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,செப்.21 - மேற்குவங்க மாநிலத்தில் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் உள்பட 8 கட்சிகள் நேற்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆதரவும் இதர மாநிலங்களில் ஓரளவு ஆதரவும் இருந்தது. மேற்குவங்க மாநிலத்திலும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. மாமூல் வாழ்க்கை பாதிப்பு இல்லை என்றும் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். செயலகத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். சில ஊழியர்கள் மட்டும் இடையூறு காரணமாக தாமதமாக வந்தனர் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அரசு ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. அப்படி விடுமுறை எடுத்தால் அவர்களுக்கு ஒரு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. 

டீசல் விலையை உயர்த்தியதற்கும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் டீசல் விலை உயர்வை கண்டித்தும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாரதிய ஜனதா உள்பட 8 கட்சிகள் நடத்திய நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: