முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்.22 - கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.1800 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு மூலம் நிரப்புகிறது. இந்த பணிக்கான விண்ணப்பம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ஆம் தேதி முடிவடைந்தது. ஆன்லைன் மூலம் பல லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு வரும் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஹால்டிக்கெட்  இணைய தளத்தல் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony