முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்டினம்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

லாஸ்ஏஞ்சல்ஸ், செப்.22 - அமெரிக்காவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பழுதான ராட்டினத்தில் சிக்கி 20 சுற்றுலா பயணிகள் தவித்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது நாட் பெர்ரி பார்ம் பொழுபோக்கு பூங்கா. இங்குள்ள ராட்சத ராட்டினம் மிகவும் திரில்லிங்காக இருக்கும். 3 நிமிடத்தில் 300 அடி உயரத்தில் சுற்றிவிட்டு தரையிறங்கும். ராட்டினத்தில் பறக்கும் போது ராக்கெட்டில் பறப்பது போல இருக்கும். கடந்த புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் இந்த ராட்சத ராட்டினத்தில் சுற்றி வருவதற்காக 20 பேர் அமர்ந்தனர். இயந்திரம் இயக்கப்பட்டவுடன் 300 அடி உயரம் சென்றது. 3 நிமிடத்தில் இறந்க வேண்டிய ராட்டினம் இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்கவில்லை. இதனால் அதில் இருந்த 20 பயணிகளும் அதிர்ச்சியால் பரிதவித்தனர். பூங்கா அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் யாரும் பயப்படத்தேவையில்லை. விரைவில் இயந்திரத்தை சரிசெய்து கீழே இறக்கிவிடுவோம் என்று அறிவித்தனர். அதற்குள் இருட்டிவிட்டது. பூங்காவை மூடும் நேரமும் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இயந்திரம் சரி செய்யப்பட்டு ராட்டினம் தரையிறக்கப்பட்டது. இந்த மாதம் ராட்டினம் இந்த மாதிரி கோளாறு ஏற்பட்டது இது இரண்டாவது முறையாகும். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்