அக்னி-3 ஏவுகணை சோதனை அபார வெற்றி

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

பாலசோர். செப்.22 - அக்னி 4 ஏவுகணை சோதனையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஏவிய நிலையில் இந்திய விஞ்ஞானிகள் நேற்று அக்னி 3 ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அக்னி 4 என்ற நவீன ரக நீண்ட தூர ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று அக்ன 3 என்ற நவீன ரக ஏவுகணையையும் விஞ்ஞானிகள் ஏவி சோதனை நடத்தினர். 3000 கி.மீ.தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தரையிலிருந்து விண்ணுக்கு பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும். 1500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகில் வங்காள விரிகுடா கடலில் உள்ள வீலர்ஸ் தீவில் இருந்து இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. அக்னி 3 வரிசையில் நடத்தப்பட்ட 5 வது சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: