முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை...!

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப். 22 - செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளது அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம். கிளன்லெக் என்ற இடத்தை நோக்கிப் போகும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது. இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் உயரம் 25 சென்டிமீட்டராக உள்ளது. 40 சென்டி மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இதை கியூரியாசிட்டியில் உள்ள ரோபோட் ஆய்வு செய்யவுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று பெயரிட்டுள்ளது நாசா. ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார். கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு. 64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்து.

இந்த பிரமிடு வடிவ பாறையானது அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் இறங்கிய கேல் கிரேட்டர் பகுதியில் உள்ள மலையிலிருந்து இந்தப் பாறையானது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட காலம் இந்தப் பாறையானது இதே இடத்தில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இது கடினமான பாறையாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்