முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் கைதான வைகோ விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சிந்த்வாரா, செப். 23 - மத்திய பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்த ராஜபக்சேவுக்கு எதிராக சிந்த்வாராவில் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநில போலீசார் அவருக்கு மாலை போட்டு மரியாதையாக வழியனுப்பி வைத்தனர். சாஞ்சியில் உள்ள புத்தர் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்த ராஜபக்சேவிற்கு கறுப்புக் காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு வைகோ மத்தியபிரதேசம் சென்றார்.  40 மணி நேரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த வைகோ,  சிந்த்வாராவில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு தொண்டர்களுடன் கைதானார். 

இதனையடுத்து வைகோவையும் தொண்டர்களை சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தன்வீர், மந்திலா மாவட்டத்தைச் சேர்ந்த சப் கலெக்டர் இளையராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினார். ம.தி.மு.க தொண்டர்களால் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறி பாராட்டு தெரிவித்தனர். இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த போலீசார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை சகிதமாக வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்