முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் எம்.பிக்கள் ஆதரவுடன் தான் மத்தியில் புதிய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, செப். 23 - பீகார் மாநிலத்தின் 40 எம்.பிக்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் புதிய அரசு அமையாது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ாஉரிமை மாநாட்டில் நிதிஷ்குமார் பேசியதாவது:

பல்லாண்டு காலமாக வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பாதிப்புகளால் பீகார் மாநிலம் கடும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடும் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் கடமை. பீகாரில் உள்ள 40 எம்.பி. க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் உறுதியை யார் தருகிறார்களோ அவர்களுக்கு நமது எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும். சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி பாட்னாவில் நவம்பர் 4 ம் தேதி மாபெரும் பேரணி நடத்த மக்கள் அணி திரள வேண்டும். இதன் மூலம் மத்தியில் ஆளும் அரசுக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து உறுதியான செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்