முக்கிய செய்திகள்

யசோதர ராஜே சிந்தியா எம்.பி.யின் சிவப்பு வைர நெக்லஸ் திருடு போனது

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Yashodhara Raje Scindia

 

குவாலியர், ஏப்.- 8 - குவாலியர் எம்.பி. யசோதர ராஜே சிந்தியாவின்  வைர நெக்லஸ் திருடு போனது. தொண்டர்கள் மாலை அணிவித்த போது அந்த நெக்லஸ் காணாமல் போனதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான்  மாநிலம் குவாலியர் தொகுதி  எம்.பி.யான யசோதர ராஜே சிந்தியா நேற்று டெல்லியில் இருந்து ரயில் மூலம் குவாலியர் நருக்கு வந்தார்.

டெல்லியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் மூலம் குவாலியர் வந்த அவர் ரயிலை  விட்டு கீழே இறங்கினார்.  பிறகு  ரயில் நிலையத்தில்  அவரது ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர்.

அந்த மாலையை கழற்றும் போது அத்துடன்  சேர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லசும் வந்துவிட்டது. 

பிறகு  பார்த்த போது  அந்த நெக்சலை  காண வில்லை. இதனால் யசோதர ராஜே அதிர்ச்சி அடைந்தார்.

தனது கட்சி ஆதரவாளர்கள் தனக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு கொடுத்த போது தனது நெக்லஸ் காணாமல் போய்விட்டது என்றும் அந்த நெக்லஸ் விலை உயர்ந்தது என்றும் அதில்   சிவப்பு வைரக்கல் பதிக்கப்பட்டிருந்தது என்றும் யசோதர ராஜே தெரிவித்தார். 

குவாலியர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த தனக்கு  இந்த நெக்லசை தனது  தாயார்  மறைந்த ராஜமாதா தனக்கு பரிசாக கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: