முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் கருடசேவை: 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப். - 24 - திருமலை, திருப்பதியில் நடைபெற்ற கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருப்பதியில் நடைபெற்று வரும் விழாக்களில் கருட சேவை மிக முக்கியமானது. அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் நடைபெற்றதால் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். தங்க கருட வாகனத்தில் ஆயிரத்து 8 தங்கக் காசு மாலை, மரகதக்கல் அட்டிகை, வைர கிரீடம், நவரத்தின ஒட்டியாணம், நவரத்தின அட்டிகை, கருநீலக்கல் பதித்த பதக்கம், பச்சை பதக்கம், வைர கவசங்கள், வைரக்கற்கள் பதித்த உடைகள் இவை அனைத்தும் சூடி ஒய்யாரமாக அமர்ந்து ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலையப்பசுவாமிக்கு சூட்டும் ஆபரணங்களின் மதிப்பு ரூ. 120 ல் இருந்து 150 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பிரம்மோற்சவத்தின் 5 ம் நாளான சனிக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளிலும் உலா வந்தார். வெள்ளிக் கிழமை இரவு பூபால வாகனத்தில் தனது உபயநாச்சியார்களுடன் மாட வீதிகளில் எழுந்தருளினார். இந்த விழாவின் போது வெள்ளிக்கிழமை மட்டும் உண்டியல் வருமானம் ரூ. 1.5 கோடியை தாண்டியது. லட்டு விற்பனை மூலம் ரூ. 42 லட்சமும், பிரசாதங்கள் மூலம் ரூ. 3 லட்சமும் கிடைத்தது. கிட்டத்தட்ட 72 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். 35 ஆயிரம் பேர் முடிகாணிக்கை செலுத்தி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்