முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்றது

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். - 24 - டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று கொழும்பு நகரில் நடந்த லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலா ந்து அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி தரப்பில், நசீர் ஜாம் ஷெட் நன்கு பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெ ற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமா க, கேப்டன் மொகமது ஹபீஸ் , இம் ரான் நசீர் மற்றும் உமர் அக்மல் ஆகி யோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆத ரவாக உமர் குல், சோகைல் தன்வீர், சாகித் அப்ரிடி ஆகியோர் பந்து வீசினர். உலகக் கோப்பை போட்டியின் 9- வது லீக் ஆட்டம் பல்லேகல்லே சர்வதேச அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்ட மாக நடந்தது. இதில் குரூப் டி பிரிவில் இடம் பெற்று உள்ள நியூசிலாந்து மற் றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந் து 177 ரன்னை எடுத்தது. நசீர் ஜாம்ஷெட் அதிகபட்சமாக, 35 பந்தில் 56 ரன்னை எடுத்தார். இதில் 2 பவு ண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். கேப் டன் மொகமது ஹபீஸ் 38 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்று ம் 2 சிக்சர் அடக்கம். தவிர, இம்ரான் நசீர் 25 ரன்னையும், உமர் அக்மல் 23 ரன்னையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில், செளதீ 31 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். ஓரம் 44 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிராங்ளின் வெட்டோரி ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி 178 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பாகிஸ்தான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவ ரில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்னை எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி இந்த லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில், நிக்கோல் 28 பந்தில் 33 ரன் எடுத்தார். இதில் 3 பவு ண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். பி. மெக்குல்லம் 31 பந்தில் 32 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். தவிர, கேப்டன் டெய்லர் 26 ரன் னையும், வில்லியம்சன் 15 ரன்னையும், வெட்டோரி 18 ரன்னையும், பிராங்ளி ன் 13 ரன்னையும், ஓரம் 10 ரன்னையும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில், சயீத் அஜ் மல் 30 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, சோகைல் தன்வீர், உமர் குல் மற்றும் சாகித் அப்ரிடி ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக நசீ ர் ஜாம்ஷெட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்