முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் ஜெகனுக்கு அக்.9 வரை காவல்நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், செப்.- 26 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வருகிற அக்டோபர் 9 ம் தேதி வரை நீதி மன்ற காவலை நீட்டித்து சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட சிலர் தற்போது சந்தல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நான்காவது குற்றப்பத்திரிகை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இவர்கள் நேற்று சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட சிலரை வருகிற அக்டோபர் மாதம் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்தினரை 30 நிமிடம் சந்தித்து பேச கோர்ட் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து கோர்ட்டிற்கு வந்திருந்த தனது தாயார் விஜயம்மாள், மனைவி பாரதி ஆகியோருடன் ஜெகன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அவரும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆந்திர சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தர்மணா பிரசாத் ரெட்டி உள்ளிட்ட சிலருக்கு சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமைச்சர் பிரசாத் ரெட்டி தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். ஆனால் அவரது ராஜினமா இன்னும் ஏற்கப்படவில்லை. இவர் அமைச்சராக இருந்த போது ஜெகன் மோகன் ரெட்டியின் கம்பெனிக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளாதக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்