முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தங்கபாலுவுக்கு கடும் எதிர்ப்பு ராகுல் காந்தி அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு, ஏப். - 8  - ஈரோடில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தங்கபாலுவுக் கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டு ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. - காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந் திய காங்கிரஸ் பொதுச் செயயலாளர் ராகுல் காந்தி ஈரோடு வளனார் கல்லூரி மைதானத்தில் புதன் அன்று பேசுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதைத் தொடர்ந்து காலை 12.00 மணிக்கு ராகுல் காந்தி வந்துவிடு வார் என்றுஅறிவிக்கப்பட்டதால் காலையில் இருந்து மைதானத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வரத் தொடங்கினார்கள். 

ஆனால் மைதானத்தில் போதிய அளவு குடிநீர் மற்றும் கழிப்பிட வச தி இல்லாததால், தொண்டர்கள் மிகவும் அவதியுற்றனர். இந்நிலையி ல் நேற்று காலை டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3 மணி அளவில், ஈரோடு வேளாளர் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார். 

மேடையில், முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன், தங் கபாலு, தி.மு.க., பா.ம.க. , கொ.மு.க., வேட்பாளர்கள் இருந்தனர். 

முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிய போது, தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். 

பின்பு தங்கபாலு பேசிய போது, இளங்கோவன் ஆதரவாளர்கள், கூச்சலிட்டு அவரை பேசவிடாமல்தடுக்கமுயன்றனர். தங்கபாலுவே பேசாதே, தங்கபாலுவே திரும்பிப் போ, தங்கபாலு ஒழிக என கோச மிட்டனர். இதைப் பார்த்த ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். 

அடுத்து பேசிய ராகுல் காந்தி, இதற்கு முன்பு ஆட்சி செய்த மாநில கட்சி ஏழை மக்களை நினைத்து கூட பார்க்க வில்லை. ஆனால் காங் கிரஸ் கட்சி ஏழைகளுக்கு உதவிவருகிறது. மேலும் ஈரோடு நகரில் நிலவி வரும் ஜவுளி, சாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். பெண்களுக்கு, விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் தருகிறது என்றார். 

ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக் கூட்ட த்தில் கலந்து கொண்ட தங்கபாலு  தனக்கு எதிராக தொண்டர்கள் கோசமிட்டதால் சோகத் துடன் காணப்பட்டார். இச்சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்