முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர்கள் பட்டியல் தேர்வில் முலாயம்சிங் தீவிரம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, செப். - 26 - பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முலயாம் சிங் யாதவ் தீவிரம் காட்டி வருகிறார். 40 பேர் கொண்ட பட்டியலை அவர் தேர்வு செய்துவிட்டார். அந்த வேட்பாளர் பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி. தற்போது முலயாம் சிங் யாதவ் கட்சிக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரியவருகிறது. முலயாம்சிங் யாதவ்வின் தம்பி ராம்கோபால் யாதவ், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளராக உள்ளார். அவரது மகன் அக்ஷய் யாதவ்விற்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரியவருகிறது. முலயாம்சிங் யாதவ் வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க மாயாவதியும் தயாராகி வருகிறார். இந்த நிலையில் உ.பி.யில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இன்னும் தேர்தல் பணியை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago