முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதானந்தாகவுடா - மனைவி உள்பட 3பேர் அக்.12-ல் ஆஜராக வேண்டும்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,செப்.-26 - அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டியதாக வந்துள்ள புகாரையொட்டி வருகின்ற அக்டோபர் 12-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, அவரது மனைவி உள்பட 3 பேர் ஆஜராக வேண்டும் என்று கோரி அவர்களுக்கு பெங்களூர் லோகாயுக்தா கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல முன்னாள் முதல்வர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில முன்னாள் முதல்வராக இருந்த சதானந்தா கவுடா அவரது மனைவி மற்றும் ஒருவர் மீது நாகலட்சுமி என்பவர் லோகாயுக்தா கோர்ட்டில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- பெங்களூர் நகரின் வடக்குப்பகுதியில் புள்வெளி அமைப்பதற்காக ஜல ஹூப்ளி, பகலூர் கிராமம் ஆகிய இடங்களில் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் சதானந்தா கவுடாவின் மனைவி சுமார் 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு முறையான தஸ்தாவேஜூகள் இல்லாமல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிலத்தில் லைசென்ஸ் இல்லாமல் சுமார் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து சதானந்தா கவுடா, முதல்வராக இருந்தபோதும், எம்.பி.யாக இருந்தபோதும் கணக்கில் இடத்தை மட்டும் காட்டியுள்ளார். ஆனால் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அவர் குறிப்பிடவில்லை. கட்டிடம் கட்டுவதற்கு முன் அனுமதி எதுவும் பெறவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான கட்டனம் எதுவும் செலுத்தவில்லை. கட்டிடம் கட்டப்படுவதற்கான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சதானந்த கவுடாவுக்கு 10 சென்ட் நிலம் துணை கமிஷனரால் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மற்றொரு கட்டிடத்தையும் சட்டவிரோதமாக சதானந்த கவுடா கட்டியுள்ளார். மேலும் கவுடா எம்.பி.யாக இருந்தபோது கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து பொய் பிரமாணம் அளித்து இடம் பெற்றுள்ளார். அதனால் சதானந்த கவுடா மற்றும் அவரது மனைவி மற்றும் பலர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் ஐபிசி-யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகாரில் போதுமான முகாந்திரம் இருப்பதால் பெங்களூர் நகர லோக் ஆயுக்தா கோர்ட்டாது வழக்கு பதிவு செய்துள்ளதோடு சதானந்தா, அவரது மனைவி உள்பட 3 பேர் கோர்ட்டில் வருகின்ற அக்டோபர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்