முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் நாங்கள்ஆட்சிக்கு வந்தால்சில்லறை வர்த்தகத்தில் அன்னியமுதலீட்டை ரத்துசெய்வோம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 27 - மத்தியில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அடியோடு ரத்து செய்வோம் என்று பாரதிய ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மக்களுக்கு எதிரான சீர்திருத்தங்களையும் ஒதுக்கி தள்ளுவோம் என்றும் பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நேற்று அரியானாவில் உள்ள சுராஜ்குந்த் என்ற இடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பொருளாதார சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேசமயத்தில் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் அடியோடு ரத்து செய்வோம் என்றார். விவசாயிகளின் நலன்களுக்கும் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக சில்லறை வர்த்தகத்திற்கும் அன்னிய நேரடி முதலீடு நல்லதல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்து செய்வோம் என்று ரவி சங்கர் பிரசாத் மீண்டும் கூறினார். கடந்த 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது சில்லறை வர்த்தகத்தில் 25 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை ஆதரிப்போம் என்று கட்சி தேர்தல் அறிக்கையில் கூறினோம். அதை கூறி ஏறக்குறைய 8 ஆண்டுகளாகவிட்டது. நாங்கள் பொருளாதார சீர்திருத்தத்தையும் நல்ல நிர்வாகத்தையும் விரும்புகிறோம். பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி கட்சியான அகாலிதளத்துடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்போம் என்றுதான் அகாலிதளம் கூறியது. இந்த விஷயத்தில் அகாலிதளத்துடன் பாரதிய ஜனதாவுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. பொதுத்தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயத்தில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரசாத் மேலும் கூறினார்.
பா.ஜ.தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் நிதீன்கட்காரி, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பது கடினம் என்றார். இதனையொட்டி பிரசாத் இந்த பேட்டியை அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்