முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் 80 வது பிறந்தநாள் ரஷ்யஅதிபர் புதின்வாழ்த்து

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, செப். - 27 - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தனது 80 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1932 ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அவரது குடும்பத்தார் இந்தியா வந்தனர். அவரது தந்தை ஒரு ஏழை வியாபாரி. அவருக்கு மன்மோகனையும் சேர்த்து 10 குழந்தைகள். ஏழை வியாபாரியின் மகனாகப் பிறந்தாலும் கல்வியால் உயர்ந்தவர் மன்மோகன் சிங். மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதியமைச்சர் என்று படிப்படியாக உயர்ந்து கடந்த 2004 ம் ஆண்டு பிரதமர் ஆனார். மேலும் கடந்த 2009 ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து அவர் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அவர் நேற்று தனது 80 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் மரியாதைக்குரிய தலைவராகவும், ஆட்சி வல்லுனராகவும், பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறீர்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்திருக்கிறது. உங்கள் தனிப்பட்ட பங்களிப்பால் இந்திய, ரஷ்ய உறவுகள் மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்