முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் இருக்கிறார்கள் மதுரையில் கருணாநிதி பேட்டி

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 8 - தமிழக அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் இருக்கிறார்கள் என்று மதுரையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.    முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் கமிஷனையும், அதிகாரிகளையும் குறை கூறி வருகிறார். இந்த நிலையில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த கருணாநிதி நேற்று மதுரையில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறித்து பேசப்படுகிறது. மின்பற்றாக்குறை ஒரு தொடர்நிகழ்வாக உள்ளது. தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது புதிய தொழிற்சாலைகள் வந்துவிடுகின்றன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷன் தன்னை ஒரு அரசியல் கட்சியின் அங்கமாக ஆக்கி கொள்ளாமல் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும். நீதி மன்றத்தை போல் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டும். திமுகவுக்கு எதிராக மாநில அதிகாரிகள் செயல்பாடுகள் உள்ளதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மாத்திரமல்ல, அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் இருக்கிறார்கள்.

   தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று நான் சொல்லவில்லை. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் குறித்து சிலகுறிப்புகளை தெரிவித்தேன். அதை பாரபட்சம் என்று சொன்னதாக சொல்கிறார்கள். மேலும், மதுரை யானைமலையை மத்திய அரசின் தொல்லியல் துறை எடுத்துக்கொள்ளப்போவதாக  செய்திகள் வெளியாயின. அதற்கு தமிழக அரசு இசைவு தெரிவிக்கவில்லை. அந்த இடத்தை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்வோம். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது, எந்த கட்சியின் பணம்  என்று அறிவிக்கப்படவில்லையே.

 இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்