முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் மகள் காஞ்சிபுரத்திற்கு வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, செப்.- 27 -பிரதமர் மன்மோகன்சிங் மகள் காஞ்சிபுரத்திற்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் மகள் உபந்தர் சிங். இவர் தனது கணவருடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட அக்டோபர் 2-ந் தேதி வருகிறார். சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஸ்டேடியத்தில் இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதை தொடர்ந்து மறுநாள் 3-ந் தேதி சிதம்பரத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். குண்டு துளைக்காத கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் சிதம்பரம், காஞ்சிபுரம் வந்தனர். இரண்டு ஊர்களிலும் காவல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு மத்திய பாதுகாப்பு படையினருடன் போலீஸ் சூப்பிரெண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஹெலிபேட், கார் செல்லும் சாலைகள், நடராஜர் கோவில், காமாட்சியம்மன் கோவில் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago