முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர துணைமுதல்வர் ராஜினாமா காங்கிரஸ் கூட்டணிக்கு தலைவலி

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, செப். - 27 - மகாராஷ்டிராவில் நீர்ப்பாசனத் திட்டங்களில் ஊழல் நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வரான அஜித் ப்வார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரின் நெருங்கிய உறவினரான அஜித் பவார்தான் துணை முதல்வர். ஏற்கெனவே இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. குறிப்பாக தமது உறவினரான அஜித் பவார் மீதான நீர்ப்பாசனத் திட்ட ஊழல் புகார்களை காங்கிரஸ் தலைவர்களே கிளப்பி விடுவதாக தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் ஜனாதிபதி தேர்தலின் போதும் எதிரொலித்து அடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், நீர்ப்பாசன திட்டங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அப்படி ஊழல் நடைபெற்று இருந்தால் சி.பி.ஐ விசாரணையில் கண்டுபிடிக்கட்டும். நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார். அஜித்பவாரின் ராஜினாமாவுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களே காரணம் என்கிறது தேசியவாத காங்கிரஸ். இப்பொழுதுதான் காங்கிரஸின் கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அடுத்து தேசியவாதக் கட்சியும் விலக தயாராக உள்ளதால் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் தலைவலி ஆரம்பித்து விட்டதாகவே கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்