முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலம் மூலம்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.28 - இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏலம் மட்டும் வழிமுறை அல்ல என்று சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு அளித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மீண்டும் ஏலம் மூலம்தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

நிலக்கரி சுரங்கம் போன்ற இயற்கை வளங்களை தனியாருக்கு உரிமம் வழங்கும்போது முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இயற்கை வளங்களை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதா? அல்லது வேறுவழியில் ஒதுக்கீடு செய்வதா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. மேலும் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது வெளிப்படையாக ஏலம்விடும் முறை ஒன்றுதான் இருக்கிறதா என்று சுப்ரீம்கோர்ட்டில் ஜனாதிபதி விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய ஏலம் ஒன்றுதான் வழிமுறை அல்லை என்று சுப்ரீம்கோர்ட்டு அந்த தீர்ப்பில் கூறியுள்ளது. இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து சுப்ரீம்கோர்ட்டு எந்தவித வரையறையோ அல்லது விதிமுறைகளையோ விதிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேசமயத்தில் வருமானத்தை பெருக்க வேண்டும் என்றால் ஏலம் விடுவதுதான் சிறந்ததாகும் அதேசமயத்தில் வருமானத்தை பெருக்கு ஏலம் ஒன்றுதான் அல்ல. வேறு வழிமுறைகளும் உள்ளன. நாங்கள் ஏலம் விடுவது என்று கூறியிருப்பது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்குத்தான். இதர இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய நாங்கள் எந்தவித விதிமுறைகளையும் வகுக்க வில்லை. இயற்கை வளங்களை ஏலம் விடும் முறையானது அரசியல் சட்ட அனுமதியை பெறவில்லை என்றும் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. 

ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2 ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஒதுக்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே ரத்து செய்திருந்தது. இந்த 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் ஏலம் மூலம்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்டடு தீர்ப்பு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்