முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் தந்து வாக்குகளை பெற நினைக்கும் திமுகவை ஓட,ஓட விரட்டி அடியுங்கள் ஏ.பி.பரதன் ஆவேசம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஏப்ரல் - 11 - சட்டமன்ற தேர்லில் பணம் தந்து பொதுமக்களின் வாக்குளை பெற முயலும் திமுகவை ஓட,ஓட விரட்டி அடித்து அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என ஸ்ரீவில்லியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் ஏ.பி.பரதன் ஆவேசமாக பேசினார். ஸ்ரீவில்லி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பொன்னுப்பாண்டியன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஸ்ரீவில்லி வடக்கு ரதவீதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு பேசுகையில் நான் ஸ்ரீரங்கத்தில் வருங்கால முதல்வர் ஜெயலலிதாவிற்காக பிரச்சாரம் செய்து விட்டு இங்கு வந்துள்ளேன்.அவர் இங்கு வர நேரம் இல்லாததால் நான் இங்கே வந்துள்ளேன்.

இந்த தேர்தலில் சர்வாதிகார,பாசீச கொடுங்கோல் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டு அதிமுக ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நமது கூட்டணியில் தற்போது கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் இணைந்து மிகப்பெரிய கூட்டணியாக திகழ்கிறது. 

திமுகவினர் பணம் தந்து தமிழக மக்களிடம்வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர்.

அவர்களை ஓட,ஓட விரட்டி அடித்து நமது கூட்டணி வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார். இவரது ஆங்கில பேச்சினை மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன் தமிழாக்கம் செய்தார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் லிங்கம், எம்.எல்.ஏ.ராமசாமி, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், தொகுதி செயலாளர் சிந்துமுருகன், மார்க்சிஸ்ட் சார்பில் அர்ஜூனன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தொகுதி இணை செயலாளர் முத்துசாமி, நக்கமங்கலம் கிளை செயலாளர் காளிமுத்து, நகர செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் சேதுபாண்டியன், தேமுதிக சார்பில் ஜப்பான் பாலமுருகன், மற்றும் புதிய தமிழகம்,சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், முஸ்லீம் லீக் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

முடிவில் வேட்பாளர் வி.பொன்னுபாண்டியன் தனக்கு ஆதரவு கேட்டு பேசி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago