முக்கிய செய்திகள்

புதிய சாலைகள் அமைக்க ரூ.7,000 கோடி உத்தர பிரதேச அரசு ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
chithik

 

லக்னோ, ஏப்.- 11 - நடப்பு நிதியாண்டில்  உத்தர பிரதேசத்தில்  புதிய சாலைகள் கட்டுமானத்திற்காக அம்மாநில அரசு ரூ. 7,099 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதி தலைமையில்  பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

உ.பி. மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்  நசிமுதீன் சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்  கூறுகையில்  உத்தர பிரதேசத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய சாலைகள் கட்டுமானத்திற்காக ரூ. 7,099 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதிய சாலைகள் அமைப்பதற்கான உத்தேச திட்டங்கள் குறித்த அறிக்கையை தயார்  செய்து அதை அரசாங்கத்திடம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.

இந்திய - நேபாள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் புதிய சாலைகளை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் வந்து விட்டன என்றும்  அவை  நிதிக்கமிஷன் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: