முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்களது தீவுகளை ஜப்பான் அபகரித்து விட்டதாக சீனாபுகார்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க், செப். - 30 - எங்களுக்கு சொந்தமான தீவுகளை ஜப்பான் அபகரித்து விட்டது என்று ஐ.நா. சபையில் சீனா பகிரங்கமாக புகார் செய்துள்ளது. கிழக்கு சீன பகுதியில் உள்ள சில தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. தற்போது இது பூதாகரமாக வெடித்துள்ளது. இதனிடையே தைவானும் இந்த தீவுகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ஜப்பான், சீனா பிரதிநிதிகளிடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. ஐ.நா. சபையில் சீன வெளியுறவு அமைச்சர் ஜப்பான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வழக்கத்திற்கு மிகவும் முரண்பட்ட வகையில் தனியார்கள் சிலரிடம் இருந்து தீவுகளை ஜப்பான் வாங்கியதாக கூறுகிறது. தீவு விஷயத்தில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எங்களது தீவுகளை உரிமை கொண்டாடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை செய்த தவறுகளை ஜப்பான் திருத்தி கொள்ள வேண்டும். ஜப்பான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவை என்று சீன அமைச்சர் யாங்சீஷே கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ஜப்பான் சீனாவின் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. இதனிடையே சீன தூதரகத்திற்கு துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்கள் அடங்கிய பார்சல் ஒன்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் பிரதமர் பெயரில் இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்