முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் தோல்விக்கு மழையே காரணம் - தோனி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். - 30 - டி -20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் - 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்தி ரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு மழை யே காரணம் என்று கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார். இதனால் சுழற் பந்து வீரர்கள் சரியாக பந்து வீச முடிய வில்லை என்றும் அவர் கூறினார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் சூப்பர் - 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை நேற்று முன் தினம் சந்தித்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய துவ க்க வீரர்கள் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ் மேன்கள் ரன் எடுக்க திணறினார்கள். பதான் அதிகபட்சமாக 31 ரன் எடுத் தார். அடுத்து ரெய்னா 26 ரன் எடுத்தார். பேட்டிங் மற்றும் பெளலிங் ஆகிய இர ண்டிலும் இந்தியா சொதப்பியது. ஆஸி. அணிக்கு எதிரான இந்த ஆட்டத் தில் அதிரடி துவக்க வீரரான சேவாக் நீக்கப்பட்டார். 5 பெளலர்கள் அணியி ல் இடம் பெற்றனர். இந்திய அணியில் 5 பெளலர்கள் இறக் கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்து ள்ளது. ஒரு போட்டியில் தோற்றதால் இதனை குறை சொல்ல வேண்டாம் என்று கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக லீக்கில் இங்கிலாந் து அணியை இந்தியா அபாரமாக வெ ன்றது. இதில் 5 பெளலர்கள் இறக்கப்ப ட்டதை தோனி சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு தலைநகர் கொழும் பில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் தோனி அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறி னார். அவர் மேலும் தெரிவித்ததாவது - ஒரு போட்டியில் தோல்வி அடைந்த தால் 5 பெளலர்கள் இறக்கப்பட்டதை குறை கூற வேண்டாம். இந்தப் போட்டியில் நாம் மோசமாக ஆடினோம். ஆனால் இதற்கு முன்பு இங்கிலாந்திற் கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி னோம். இந்த ஆட்டத்தில் மழை பெய்து கெடுத்து விட்டது. ஆட்டத்தின் போக்கே மாறி விட்டது. மழை பெய்தது ஆஸி. பேட்ஸ்மேன்க ளுக்கு சாதகமானது. நமது சுழற் பந்து வீரர்களால் சரியாக பந்து வீச முடியவி ல்லை என்றும் அவர் தெரிவித்தார். சேவாக் நீக்கப்பட்டது குறித்து அவரிட ம் கேட்ட போது, சில நேரம் இது போன்ற சிரமாமான முடிவுகளை கே ப்டன் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர். ----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்