முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு பிரச்சனை ஜெயலலிதா பெற்றுத்தந்த உத்தரவை அமுல்படுத்த தவறியவர் கருணாநிதி -முத்துமணி

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப். - 11 - பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு பிரச்சனை குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் பெற்றுத்தந்த உத்தரவை அமுல்படுத்தத் தவறியவர் கருணாநிதி என்று மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழரசனை ஆதரித்து முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான முத்துமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் உள்ள கூட்டணி மக்கள் விரும்புகின்ற, வரவேற்கிற வெற்றிக் கூட்டணி ஆகும். இந்த கூட்டணி வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல்வராவார் என்று ஒருமனதாக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் மக்கள் விரோத கூட்டணி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட்டணியான தி.மு.க. கூட்டணியின் நிலை என்ன? சமீபத்தில் கருணாநிதி கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். இது அவரது நம்பிக்கையின்மையை காட்டுகிறது. தனியாக ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் துணிவு கருணாநிதிக்கு இல்லை. காங்கிரசாருக்கும் இல்லை. ஏனென்றால் மக்கள் அது ஒரு குழப்பமான கூட்டணி என்று அதனை தள்ளி வைக்கும் முடிவை எடுத்துவிட்டார்கள். 

கருணாநிதி பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு பிரச்சனையில் உரிய தீர்வுகாண தவறிவிட்டார். 1895 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பெரியாறு அணை கட்டப்பட்ட காலத்திலேயே சென்னை ராஜதானிக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் அடிப்படையில் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம். அவ்வாறு உயர்த்தினால்தான் நமக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். 1977 ல் அணை பலவீனம் என்று சொல்லப்பட்டு அணையை பலப்படுத்த வேண்டும் என்று கூறி அதனால் தற்காலிகமாக 136 அடிவரை மட்டும்தான் உயர்த்துவது என்றும் மராமத்துப்பணி முடிந்தபிறகு படிப்படியாக 152 அடிவரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மராமத்துப்பணி முடிவடைந்த பிறகும் மேற்படி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு கேரள அரசு பல வகைகளில் முட்டுக்கட்டை போட்டு வந்தது. அப்போது 2001-2006 ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 142 அடிவரை முதற்கட்டமாக உயர்த்திக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத்தந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மேற்குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த தவறிவிட்டார். இதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? கேரளாவில் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான சூர்யா டி.வி., கிரன் டி.வி., சூர்யா மூவி, சூர்யா மியூசிக், சூர்யா நியூஸ் ஆகியவை இயங்கி வருகின்றன. பெரியாறு பிரச்சனையில் கேரளை அரசை எதிர்த்தால், கேரளாவில் உள்ள தனது குடும்ப தொலைக்காட்சிகளுக்கான வியாபாரம் பாதிக்கும் என்று கருணாநிதி கருதினார். கருணாநிதிக்கு எப்போதுமே சுயநல லாபம் தான் முக்கியம். நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை. எனவே தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்களின்  குடிதண்ணீர், விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக இருப்பது இந்த பெரியாற்று நீர்தான். விவசாயிகளின் நலன்காக்க பெரியாறு நீர்மட்ட உயர்வு பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நமது உரிமையை நிலைநாட்ட ஜெயலலிதாவை முதல்வராக்குவது நமது தலையாய கடமையாக உள்ளது. 

நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாம் பெயர் வைக்க வேண்டாமா? அதைப்போல விவசாய பெருமக்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை ஆட்சியாளர்கள் வழங்கவில்லை. இதனால்தான் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றும், சொட்டு நீர் பாசன வசதி செய்துதரப்படும் என்றும், போதிய தரமான விதை, உரம் வழங்கப்படும் என்றும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு தற்போதுள்ள விலை 1800 -ல் இருந்து 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், நதிகளை இணைக்க நதிநீர்ச் சாலை அமைக்கப்படும் என்றும் தமது தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

கருணாநிதி ஆட்சியில் மின்வெட்டுத்தான் மிகப்பெரிய பிரச்சனை. இவரது ஆட்சிக்காலம் ஒரு இருண்டகாலமாகும். மின்சார வெட்டினால் தொழில் நிறுவனங்கள், விவசாய வேலைகள், மாணவர்களுடைய கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அ.தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்துவருகிறார். அதாவது மே மாதத்திற்கு பிறகு மின்வெட்டு இருக்காது என்று பலமுறை அடித்துச் சொல்லிவருகிறார். என்ன காரணம்? மே மாதத்திற்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி மலரப்போவது உறுதி என்பதால், வீராச்சாமி திடமாக நம்புவதால் அவர் அவ்வாறு கூறிவருகிறார். இருண்ட தமிழகத்தில் ஒளியேற்றிட, மக்களின் நலன் காத்திட ஜெயலலிதாவை தமிழகத்தின் முதல்வராக்கிட மதுரை கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழரசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி கழக செயலாளர் இளங்கோவன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தக்கார் பி.பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ், இடது கம்யூனிஸ்ட் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் திருஞானம், அ.தி.மு.க. முன்னாள் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் சரிதாபானு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago