முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷம் குறித்து 10நாளில் சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கைதாக்கல்

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,அக்.- 1 - திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் அறைகளில் எடுக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வைரம், வைடூரியம்,பவளம், நவரத்தினங்கள் குறித்து வரும் 10 நாளில் சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு பிரதிநிதி கோபால் சுப்பிரிமணியம் தெரிவித்துள்ளார். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் உள்ள ரகசிய அறைகளை திறந்து பார்த்தபோது உலகமே வியக்கும் வண்ணம் குவியல் குவியலாக தங்க நகைகள், சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் இப்படி விலை மதிக்க முடியாத அளவுக்கு பெட்டி,பெட்டியாகவும்,குவியல் குவியலாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. அவைகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகைகளை பாதுகாக்கும் பணியில் சுப்ரீம்கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி கோபால் சுப்பிரிமணியம், நகைகளை கண்காணிக்கும் கமிட்டியின் தலைவர் எம்.என்.கிருஷ்ணா, கமிட்டியில் இடம் பெற்றுள்ளவரும் திருவாங்கூர் முன்னாள் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்யா வர்மாஆகியோர் நேற்று ஸ்ரீ பத்மநாபா சுவாமி கோயிலுக்கு வந்தனர். அப்போது கோபால் சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறுகையில் கோயிலில் எடுக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற பொக்கிஷம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதிகள், கோயிலை பராமரித்து பாதுகாத்து வருவது போதுமானதாக அல்ல என்று நினைத்து கவலையை தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை நான் பார்த்தாலும், கோயிலுக்கு வந்து சூழ்நிலையை ஆய்வு செய்ததாலும் கோயில் குறித்த அடிப்படை ஆதாரங்களை திரட்ட என்னால் முடிந்தது. கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பாதுகாத்து காப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார். என்னுடைய பணியானது கோயிலை பாதுகாப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. நான் குறைந்த நேரத்தில் நிறைய பணிகளை கோயிலுக்காக செய்துள்ளேன். பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியையும் பார்த்தேன். மிகவும் திறமையும் அனுபவமும் உள்ளவர்களை மதிப்பிடும் பணியில் சுப்ரீம்கோர்ட்டு அமர்த்தியுள்ளது. அவர்களுடைய பணியால் மதிப்பிடும் பணி உண்மையாக இருக்கிறது என்று என்னை உணரச்செய்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். கோயிலுக்குள் பொக்கிஷன் வைத்திருக்கும் பகுதிக்கு நீங்கள் சென்றீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் யாரும் என்னை பார்க்க வேண்டும் என்று மனு எதுவும் கொடுக்கவில்லை என்றார். கோயிலில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்திகரமாக இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த சுப்பிரமணியம் கோயிலை சுற்றிலும் போடப்பட்டுள்ள பாதுகாப்பை என்னால் பார்க்க முடிந்தது. பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்து வருகிறார்கள். அதேசமயத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் நான் ஆலோசனை நடத்திய அடிப்படையில் கோயில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று வருகின்ற 10-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கையில் சிபாரிசு செய்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்