முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றது

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. - 1 - டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற முதல் சூப்பர் - 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது.  இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் ஷேன் வா ட்சன் அதிரடியாக ஆடி அரை சதம் அடி த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்க பலமாக மைக்ஹஸ்சே மற்றும் கிரேக் ஒயிட் ஆகியோர் ஆடினர்.  முன்னதாக பெளலிங்கின் போது, டொகெர்டி மற்றும் வாட்சன் இருவரும் நன்கு பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் 19 -வது ஆட்டம் கொழும்பு நகரி ல் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நே ற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.  முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற ஆஸி. அணி பீல்டிங்கை தேர்வு செ ய்தது. தெ.ஆ. அணி தரப்பில், லெவி மற்றும் அம்லா இருவரும் ஆட்டத்தை துவக்கினர். ஆஸி. பெளலர்கள் இந்தப் போட்டியி ல் சிறப்பாக பந்து வீசியதால் தெ. ஆ. அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னை எடுத்தது. தெ. ஆ. அணி சார்பில் பின் வரிசை வீரரான பீட்டர்சன் அதிகபட்ச மாக, 19 பந்தில் 32 ரன் எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி அடக்கம். தவிர, பெகா ர்டியன் 27 பந்தில் 31 ரன்னையும், டுமினி 25 பந்தில் 30 ரன்னையும், கேப்டன் டிவில்லியர்ஸ் 24 பந்தில் 21 ரன்னையு ம், அம்லா 15 பந்தில் 17 ரன்னையும், எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான டொகெ ர்டி 20 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். வாட்சன் 29 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 147 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை தெ.ஆ. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்னை எடு த்தது. இதனால் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரே லிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி யின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், வாட்சன் இந்தப் போட்டியில் அபராமாக பேட்டிங் செய்து 47 பந்தில் 70 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். மைக் ஹஸ்சே 37 பந்தில் 45 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ஒயிட் 13 பந்தில் 21 ரன் எடுத்தார். 

தெ.ஆ. அணி சார்பில், மார்கெல் 23 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். பீட்டர்சன் 41 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். 

----------------------------------------- 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்