முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கிளிண்டனுடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு

புதன்கிழமை, 3 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க்.- 3 - நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை மத்திய வெளியுறவுத்துறை மைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐ.நா. பொதுச்சை கூட்டத்தில் பங்கேற்ற சென்ற கிருஷ்ணா அங்கு புற நிகழ்வாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்தார். சுமார் 45 நிமிட நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள், பிராந்திய பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியர்களுக்கான விசா கட்டணங்கள் குறித்தும் அமெரிக்காவில் சீக்கிய குருத்துவாரா மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்தும் கிளிண்டனுடன் கிருஷ்ணா விவாதித்தார். அமெரிக்காவில் உயர்த்தப்பட்டுள்ள விசா கட்டணங்களை குறைக்கும்படி கிருஷ்ணா வலியுறுத்தினாலும் கூட தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கிளிண்டனுடன் கிருஷ்ணா நடத்திய இந்த சந்திப்பு இந்த ஆண்டில் நடந்த 3 வது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony