முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயேந்திரர் - விஜயேந்திரர் புதுவை கோர்ட்டில் ஆஜர்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.4 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் சென்னை ஜகோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை நகல் தர வேண்டும். அரசு வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 

இவற்றின் மீது விசாரணை ஜகோர்ட்டில் நடந்து வந்ததால் புதுவையில் நடந்த வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 20 பேர் ஆஜர் ஆனார்கள். ரஜினி, பழனி, ஆறுமுகம், தில் பாண்டியன் ஆகியோர் ஆஜர் ஆகவில்லை. இவர்களில் ரஜினி ஆஜர் ஆகாததற்கு கோர்ட்டில் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவரை அடுத்த விசாரணையின் போது போலீசார் ஆஜர் செய்ய வேண்டும் என்று நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். 

அப்போது அரசு வக்கீல் தேவதாஸ் ஆஜராகி, பத்மா, ஆனந்த் சர்மா ஆகியோர் ஜகோர்ட்டில் தாக்கல் செய்த 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். பத்மா, ஆனந்த் சர்மா சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்தை குற்றவாளி பட்டியலில் சேர்க்க வேண்டும். பிறழ் சாட்சி அளித்த அனைவரிடமும் மீண்டும் விசாரணை  நடத்த வேண்டும் என்று அந்த  மனுவில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதன் மீது 30-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி முருகன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago