முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணத்திற்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது

புதன்கிழமை, 3 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 423 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 3,670 பேரும், புதுச்சேரியில் இருந்து 72 பேரும், அந்தமான்​நிக்கோபர் தீவுகளில் இருந்து 61 பேரும் ஆக மொத்தம் 3,803 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று முன்தினம் காலை 10.20 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 218 ஆண்களும், 201 பெண்களும் 4 குழந்தைகளும் என 423 பேர் சென்றனர்.

அவர்களை தமிழக அமைச்சர் முகமது ஜான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழக அரசு செயலாளர்கள் அலாவுதீன், தங்க.கலியபெருமாள் ஆகியோர் வாழத்தி அனுப்பி வைத்தனர். ஹஜ் பயணத்திற்காக வருகிற 10-​ந் தேதி வரை 9 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.

பின்னர் அமைச்சர் முகமது ஜான் நிருபர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முதல்​அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கூறும்போது, `ஹஜ் பயணிகள் எந்த வித சிரமுமின்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து புனித பயணம் செல்பவர்கள் ஜித்தா நகருக்கு சென்று, அங்கிருந்து புனித நகருக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என நம்புகிறோம்' என்றார்.

புனித ஹஜ் பயணத்திற்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago