முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா வெளியில் வந்தால் கூட்டாளி சாதிக்பாஷா நிலைதான் அவருக்கு ஏற்படும்- எஸ்.ஏ.சந்திரசேகரன்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

ஆவடி, ஏப்.- 11 - சிறையில் இருக்கும் ஸ்பெக்ட்ரம் ராசா வெளியில் வந்தால் கூட்டாளி சாதிக்பாஷா நிலைதான் அவருக்கு ஏற்படும் என்று ஆவடியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார்.

அம்பத்தூர், ஆவடி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களான வேதாச்சலம், அப்துல்ரஹீம் ஆகியோரை ஆதரித்து விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இயக்குநர் சந்திரசேகரன் பிரச்சாரம் செய்தார்.

ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹீமை ஆதரித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவடி அண்ணா சிஐல அருகில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. நானும் அரசியல்வாதி இல்லை. நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விஜய் உத்தரவின் பேரில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

இன்று விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கிறார்கள். முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலே தாய்மார்களின் கண்களில் கண்ணீர் வருகிறது. விஷம் போல் ஏறிவிட்டது. இதை தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழல் நாட்டில் இதுவரை 1.52 கோடி கலர் டி.வி. வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.3500 கோடி இது யார் வீட்டு பணம்? உங்கள் பணம், என் பணம், மக்கள் வரிப்பணம். இந்த இலவச கலர் டி.வி.க்கு கேபிள் டி.வி. கட்டணமாக கருணாநிதி குடும்பம் நடத்தும் எஸ்.சி.வி. நிறுவனத்திற்கு மாதம் ரூ.250 கோடிக்கு மேல் ஓராண்டுக்கு ரூ.3000 கோடி வருமானம் கிடைக்கிறது. 5 ஆண்டுக்கு இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி சென்றடைகிறது. தொழிற் தொடங்க மக்களின் வரிப்பணத்தை முதல் போட்டு பலாயிரம கோடி ரூபாய் தன் குடும்பத்திற்கு வருமானத்தை சேர்க்கிறார். இதுதான் கருணாநிதியின் சுபரூபம். 

விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை தடுக்க, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் ரஹீமை வெற்றி பெற செய்யுங்கள்.

அ.தி.மு.க.வுடன் கை கோர்த்து செயல்படும் விஜய் மக்கள் இயக்கம் சாதாரணமானதல்ல. அந்த இயக்கத்தில் உள்ள நீங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆவடி நகர தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர். ஆவடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த லீலாவதி உள்ளிட்ட 30 பேர் புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி வேட்பாளர் அப்துல் ரஹீம் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., புதிய தமிகம் உட்பட கூட்டணி கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony