முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் காந்தி ஜெயந்தி: இந்தியா - பாக்., பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக். 5 -ஐ.நா.வில் காந்தி பிறந்த நாள் விழா இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சார்பில் கொண்டாடப்பட்டது. காந்தியடிகள் பிறந்த நாள் விழா, சர்வதேச அகிம்சா தினமாக கொண்டாடப்பட்டது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் சிங் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமை வகித்தார். ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி அப்துல்லா ஹூசைன் ஹரூன் பங்கேற்று பேசுகையில், 

தனது பாட்டனாரின் இறப்பின் போது வீட்டுக்கு வந்த மகாத்மா காந்தியடிகள் கடிதம் எழுதியதை நினைவுகூர்ந்தார். 

மேலும் காந்தியடிகளின் சத்தியாகிரகம் அற்புதமான ஒன்று. இறக்கும் தருவாயிலும் உலக சமுதாயத்திற்காக பிரார்த்தித்தவர். மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவரின் கொள்கைகளுக்கு அவரே முன்னுதாரணமாக திகழ்ந்தார். மகாத்மாவின் கொள்கைகளை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றார். 

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, மாற்றத்தை கொணர்வதற்கான ஒரு கருவியாக வன்முறையை அவர் ஏற்கவில்லை. எல்லா வகையிலும் வன்முறையை வெறுத்தார். மோதல்கள் தடுக்கப்பட வேண்டும். சமத்துவமற்ற தன்மை நீக்கப்பட வேண்டும். அவரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதற்கான முன் வலிமை நமக்கு வேண்டும் என்றார். ஐ.நா. பொதுக்குழு கடந்த 2 ம் தேதியை சர்வதேச அகிம்சா தினமாக 2007 ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago