முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுக்காக பணம் பெறுவது சட்டப்படி குற்றமாகும் தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 11 - ஓட்டுக்காக பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என  மாவட்ட தேர்தல் அலுவலர்   எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பொதுத்தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் வாக்களிப்பது ஜனநாயகக் கடமையாகும். வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி வாக்காளர்கள் அச்ச உணர்வின்றி நேர்மையாகவும், சுந்திரமாகவும் வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்களுக்குப்பணம் மற்றும் இதர பொருட்கள் அளிப்பதும், வாக்காளர்கள் அதனைப்பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வாக்காளர்கள் தங்கள் வாக்கிற்காக வேட்பாளர்களால் அளிக்கப்படும் பணத்தையோ, பரிசையோ தவிர்த்து நேர்மையான முறையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த  கேட்டுகொள்கிறேன். அதைப்போல் வாக்காளர்களுக்கு பணமோ - பரிசுப்பொருளோ அளித்து வாக்குபெற முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இத்தகைய குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் தேர்தலை நேர்மையாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்குமாறு மதுரை மாவட்ட கலெக்டர் உ.சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்