முக்கிய செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
kashmiri

ஸ்ரீநகர்,ஏப்.- 11 - ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில் விடுக்கப்பட்ட பொது வேலை நிறத்தத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டதால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டது.  காஷ்மீர்  மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழ மை அன்று ஜமாத் -இ-அஹ்லிஹாதிஸ் என்ற அமைப்பின் தலைவர் மெளல்வி சவுகத் அகமது ஷா என்பவர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் பலியானார்.
இவரது படுகொலைக்கு கண்டனம் தேரிவிக்கும் வகையில் ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன் படி நேற்று முன்தினம் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பொது வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நீடித்தது.
ஸ்ரீ நகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது ம் பொது வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,கல்வி நிலையங்கள், வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீநகரில் மிகவும் பிரபலமான சன்டே மார்க்கெட்டும் அடைக்கப்பட்டிருந்தது. சாலைகளில் போக்குவரத்து நடைபெறவில்லை. இருந்தாலும் குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் தனியார் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருநந்தன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: