முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை: இலங்கை-மே.இ.தீவு இன்று பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 7 - டி - 20 உலகக் கோப்பை இறுதிப் போ  ட்டியில் பட்டத்தைக் கைப்பற்ற இலங் கை மற்றும் மே.இ.தீவு அணிகள் இன் று கொழும்பு நகரில் பலப்பரிட்சை நட த்த உள்ளன. ஐ.சி.சி. சார்பிலான 20-க்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங் கையில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை கைப்பற்ற 12 அணிகள் களம் இறங்கின.  

இதில் முன்னதாக லீக் ஆட்டங்கள் நடந்தன. இதன் முடிவில் வங்காளதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகள் வெளி யேற்றப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து சூப்பர் - 8 ஆட்ட ம் நடந்தது. இதன் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்று ம் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் வெ ளியேற்றப்பட்டன. 

உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடைபெற்றது. இதன் முதல் அரை இறுதியில் இலங்கை 16 ரன் வித் தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. 

5-ம் தேதி நடைபெற்ற 2-வது அரை இறுதியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 74 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரே லியாவை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறி யது. 

20-க்கு 20 உலகக் கோப்பை போட்டி யின் இறுதிச் சுற்று ஆட்டம் இன்று கொழும்பு நகரில் நடக்கிறது. இதில் சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற இலங் கை மற்றும் மே.இ.தீவு அணிகள் மோ த ஆயத்தமாக உள்ளன. 

இரு அணிகளும் முதன் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன. இலங்கை அணி 2-வது முறை யாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ள்ளது. 

2009 -ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பாகிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பைய இழந்தது. 

மே.இ.தீவு அணி முதன் முறையாக இறுதிப்  போட்டிக்கு நுழைந்துள்ளது. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஜாம்பவ னாக திகழ்ந்த அந்த அணி பின்பு புக ழை இழந்தது. 

இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, தில்ஷான், ஜீவன் மென்டிஸ், பெரீரா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, மென்டிஸ் ஹெராத் போன்ற சிறந்த பெளலர்களும்  இடம் பெற்று உள்ளனர். 

மே.இ.தீவு அணியில் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, ஜே. பிராவோ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சாமுவேல் ஸ், சுனில் நரீன், பத்ரி , சம்மி போன்ற சிறந்த பெளலர்களும் இடம் பெற்று உள்ளனர். 

இலங்கை மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான இந்த இறுதிப் போட்டி இரவு 7.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்று ம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago