முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டாளுக்கு வெங்கடாஜலபதியின் பட்டு சாத்தி பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,அக். 7  - ஸ்ரீவில்லி ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவை திருப்பதி திருமலையில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவையின்போது வெங்கடேசபெருமாளுக்கு சாத்தப்பட்ட பட்டு, பரிவட்டம் ஆகியவற்றை எதிர்சீராக ஸ்ரீவில்லி ஆண்டாளுக்கு அணிவிப்பது வழக்கம். 

அதேபோல் இந்த ஆண்டு கடந்த 20.9.2012 அன்று ஸ்ரீவில்லி ஆண்டாள் களைந்த மாலை,பட்டு, வஸ்திரம் கைகிளி ஆகியவற்றை கிருஷ்ண அய்யங்கார், ரங்கராஜன் அய்யங்கார் ஆகியோர் திருப்பதி திருமலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு வானமாமலை ஜீயர் மடத்தில் வைத்து திருமலை தேவஸ்தான நிர்ராகம் அதனை பெற்று கொண்டது. 

இதனை தொடர்ந்து திருப்பதி நிர்வாகம் ஸ்ரீவில்லி ஆண்டாளுக்கு எதிர்சீராக மஞ்சள் வண்ணபட்டு, 2 வெண் குடைகள் வழங்கியது. இவற்றை ஸ்ரீவில்லிக்கு கொண்டு வந்து காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணிக்கு ரங்கராஜன் அய்யங்கார், கிருஷ்ண அய்யங்கார் ஆகியோர் கோவில் மரியாதையுடன் புடவை,குடைகளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வந்து சன்னிதியில் ஊஞ்சாசேவையின்போது ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

அப்போது விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் கோவில் அலுவலர்கள் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்புற செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்