முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 8 - காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​

கர்நாடக அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கும் நிலையில், அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கவலைப்படும் கிருஷ்ணாவுக்கு, தண்ணீரே இல்லாமல் அவதிப்படும் தமிழக விவசாயிகளின் துயரம் தெரியாமல் போனது வேதனையான ஆச்சரியம்தான்.

தனது மாநில உழவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இன்னொரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிப்பதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அமைச்சராக இருக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார்.

இவரால் இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க முடியாது. எனவே, இந்திய அரசியல் சட்டத்திற்கும், தமிழக நலனுக்கும் எதிராக செயல்பட்டு வரும் கிருஷ்ணாவை மத்திய அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீnullக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்