முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கொறடாவாக வைகை செல்வன் நியமனம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 8 - ​ தமிழக அரசு தலைமைக் கொறடாவாக வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல்​அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்தார். சட்டசபையில் அரசு கொறடாவாக இருந்த மோகன் ஊரக தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். நேற்று (முன்தினம்) அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து காலியாக இருந்த அரசு தலைமை கொறடா பதவிக்கு வைகை செல்வன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:​

முனைவர் வைகை செல்வன், அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர். அவர் 6.10.2012​ஆம் நாள் முதல் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

44 வயதான வைகைச் செல்வன் வக்கீலுக்கு படித்தவர். இன்டர்நெட் பற்றிய ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் 14 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இலக்கிய அணி இணை செயலாளராக 10 ஆண்டுகளும், இலக்கிய அணி செயலாளராக 6 ஆண்டுகளும் பணியாற்றினார். அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

வைகை செல்வன் எம்.எல்.ஏ. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலை மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சரவணன், தாயார் பெயர் சுசீலா. தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசிக்கிறார். மனைவி பெயர் முத்துலட்சுமி எம்.காம் பட்டதாரி. இவர்களுக்கு நற்றினை (8) ஸ்ரீஜெயா (2) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை தோற்கடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago