முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களில் சிறு-குறு - நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14 கோடியே 25 லட்சம் நிதியுதவி:

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.9 - கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.14 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   ஒளிவு மறைவற்ற, திறமை மிக்க மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பது தான் ஒரு நல்ல அரசின் இலக்கணமாகும்.  அந்த வகையில், இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், nullநீண்டகால மறுவாழ்வுப் பணிகளையும்  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுத்தி வருகிறது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வீசிய  தானே புயலினால் பலர் தங்களது வீடுகளை இழந்தனர்.  பயிர்கள்  சேதமடைந்து, மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது.  இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டு, குறுகிய காலத்திலேயே பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து, அவர்களது வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது. பயிர்களை இழந்த விவசாய பெருமக்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண தொகுப்பினை தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு வழங்கியது.   வீடு இழந்த மக்களுக்கென, 1 லட்சம் வீடுகள் கட்ட 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்னெவே ஆணை பிறப்பித்துள்ளார். தானே புயலின் தாக்கத்தில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.   எனவே தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துணர்வு கொடுத்து,  மீண்டும் செயல்பட வழிவகை செய்யும் வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 2004 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் 12 கோடியே 92 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 53 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் செயல்படுவதற்கு ஏதுவாக 1 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும்  ஆக மொத்தம் 2,057 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் 14 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மீண்டும் உற்பத்தி தொடங்கி, தொழில் வளர்ச்சி உருவாகுவதற்கு வழி வகை ஏற்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்