முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவுக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 9 - முஸ்லிம்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஏ.கே.தாஜுதீன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையிலும், ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பல்வேறு நல திட்டங்களை முஸ்லிம் மக்கள் கழகம் வரவேற்கிறது. சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க ஒரு கோடியே என்பது லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், கல்வியில் முன்னேற்றம் அடைய அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகையாக ரூ.5,000, ரூ.4,000, ரூ.2,000 என உயர்த்தப்பட்டதையும் முஸ்லிம் மக்கள் கழகம் பாராட்டி வரவேற்கிறது. மேலும் ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் தொடங்க இலவச தையல் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கிடவும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக வழங்கப்பட்டு வரும் மானிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதைம் முஸ்லிம் மக்கள் கழகம் வாழ்த்தி வரவேற்கிறது. மேற்கண்ட நல திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவுக்கு தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், முஸ்லிம் மக்கள் கழகம் சார்பிலும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்டவாறு முஸ்லிம் மக்கள் கழக தலைவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்