முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்நிய முதலீட்டை கண்டித்து பா.ஜ.க. பிரச்சார இயக்கம்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, அக்.11 - சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்தும், காங்கிரசின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையிலும்,அக்டோபர் 11-ம் தேதி முதல் நவம்பர் 20 வரை பா.ஜ.க. பிரச்சார இயக்கம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில், சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத அளவில் ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் வசம் உள்ள நிலக்கரித்துறையில் ஊழல் நடைபெற்று உள்ளது. சிறுவணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கக்கூடிய வகையில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும் பிரதமர் வால்மார்ட் நிறுவனத்திற்கு கொள்கை பரப்பாளராகவே செயல்படுகிறார். மேலும் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மீது மம்தா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை பா.ஜ.க. ஆதரிக்கும். 

நதிநீர் பிரச்சினையை அரசியலாக மாற்றக் கூடாது. தற்போது மாநிலங்களில் நீர் பங்கீடு என்பது அதிகமாக தேவைப்படுகின்றது. எனவே தேசிய நதிநீர் இணைப்பு கொண்டு வரப்பட வேண்டும். நதிநீர் பிரச்சினையில் மேல்மட்டத் தலைவர்கள் பங்கேற்று பேசி தீர்க்க வேண்டும். 

மத்திய காங்கிரசின் ஊழலை கண்டித்தும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கண்டித்தும் நாடு முழுவதும் அக்டோபர் 11 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை பா.ஜ.க. சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago